பொங்க பான வாங்கியாற போறே

பொங்க பான வாங்கியாற போறே ஆயா,
பொங்க பான வாங்கியாற போறே
இந்தாண்டு கொசவூட்டு பெருசு இருக்கு பான உண்டாக்க,
அடுத்தாண்டு பான வாங்க எங்க போவே ஆயா

ஊருல இருக்கதோ ஒத்த கொசவூடு
பானயெலாம் அடுக்கி வச்சி அழகாத்தே இருக்குமாயா
வூட்டு பெருசுகுந்தா ஆயி போச்சு தொண்ணூறுக்கு மேல,
வாரிசெலாம் கெடக்குதுக பட்டணத்து மேல.

பெருசும் பாக்கையில பொலம்பி தான் வக்கிமாயா
எனக்கு போறவு யாரு பாப்ப
இந்த கொசதொழில?
புள்ளைகள மேலயும் கொறபாடுல்ல
வரும்படி இல்லாம என்னதான் செய்ங்கனு

இப்பெலாம் எவ ஆயா பானெல பொங்க வக்கிறாளுக,ஏதோ குக்கருனு இருக்குதாமாயா
பக்கத்துல நின்னு பக்குவேந்தே பாக்கவோணாம் அதுவே பக்குவமா வச்சிபுடுமாம் ஆயா

பக்கொநின்னு பக்குவோம் பக்கற வேளைகுல
டிவி பொட்டி ஓடித்தே போயிருமாம் ஆயா
டிவி பொட்டி ஓடித்தே போயிருமாம்

முந்தா நா சோத்த ஐசு பொட்டில வச்சு திங்கிற காட்டு ஜனத்துக்கு எங்க ஆய தெரிய போவுது மம்பான சோத்து ருசியும் தெம்பு,பித்துகுளிய நா பொழம்பி என்னத்துக்கு ஆயா
நா போறே பொங்க பான வாங்க
நா போறே பொங்க பான வாங்க

====================================
முதல் முறையாக கிராமிய நடையில் முயற்சித்து இருக்கிறேன்.தவறுகளை திருத்த வேண்டுகிறேன்

எழுதியவர் : புவனா (12-Jan-14, 2:47 pm)
பார்வை : 612

மேலே