மழை
கடலினில் பிறந்து முகிலோடு புணர்ந்து
நானே உழவனின் நட்புக்கு உரியவள்
வானே என் வளம் வரும் வீதி
நான் ! நில மேடையை நாட மறந்தால் !
வான் பருந்தெல்லாம் வருந்திக்கூவும் !
ஓடையின் பாடல் ஒடுங்கிப்போகும்!
நட்ட செடிகொடி பட்டுபோகும் !
ஒட்டும் உறவும் விட்டுப்போகும்!
மண்ணில் வீழ்ந்து மனமதுவீச
செம்புல பெயல் நீர் எயென்பர் புலவர்
படித்த புலவர் மாரியென்பார்
படியாமக்கள் மழை என்பர் .
பட்டறிவில்லார் சொல்லி வைத்த
முட்டாள் கடவுளின் மூத்திரமல்ல --
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
