பெண்ணால் உணர்தேனே.
பூ பூக்கும் நேரம்
அதை யார் தான் அறிவாரோ?
நெஞ்சிற்குள் காதல் - பூத்தால்
அதை உரைப்பதில் பிழை ஏனோ ?
நொடியில் நுழைந்திடுமே -எந்த
வலியும் தெரியாதே.
பிரிந்தால் உடைந்திடுமே -அந்த
உணர்வில் பிழையேது.
காதல் வளியாக
எந்தன் நெஞ்சம் கல்லாக.
அவள் பார்வை மொழியாக
இதழ் பேச மறுக்கின்றதே.
இரக்கிமில்லா சிறு பார்வையிலே
இதயம் பறித்தாளே.
அவள் பறித்ததும் தான் - ஐயோ நான்
சொர்க்கம் உணர்தேனே.
அவள் பதிவால் காயமெல்லாம்
சாயம் போகிறதே.
எனை மீண்டும் கொள்வாள் என்றே
இதயம் காத்திருதே.
உயிர் தாங்கும் - கருவை போல்
என் காதல் ஆனாளே.
இந்த நிலை தான் சுகமென்று
இந்த பெண்ணால் உணர்தேனே.