இயற்கையோடு
இருண்டு கிடந்த சமூகத்தின்
விடியல் கண்டான்!
சின்ன சின்ன ஆசைகளில்
சிம்மாசனமிட்டான்!
கல்லை சிற்பமாக்கினான்!
மலையை மண்ணாக்கினான்!
மின்னலை விலங்கிட்டான்
மின்சாரம் கண்டான்!
சூரியன் தடுக்கி விழுகையில் சிந்தித்தான்!
சிந்திதித்ததெல்லாம் சேகரித்தான்!
சித்திரம் படைத்தான்!
பூமி தோளில் வெயில் போர்த்தி
பகல் மடியில் வெப்ப சலனம்!
அந்தி ஓய்ந்தாலும்
அடங்காமல் அனல் காற்று!
அக்கினி கடவு திறந்ததால்
பிரபஞ்ச நுரையீரல்
சுவாசிக்க மறுக்கிறது!
கடலின் சுவாசப்பை அடங்கியது
காற்று ஓய்வெடுக்க சென்றது
பற்றி எரிகிறது பனிமலை!
அனல் சொட்ட சொட்ட
அக்கினி மழை
அள்ளி தெளிகிறது இயற்கை!
வாழ்வில் சாவுக்கு
வழி வகுத்து விட்டது !
காணி நிலம் கூட இல்லாமல்
வளர்ந்து திமிராய் நிற்கிறது
கட்டடங்கள்!
ஏரிகள் குளங்கள் எல்லாம்
தொழிற்சாலை தண்ணீரில்!
ரசாயன கலவையின் வைரஸ் கிருமியால்
ரணம் ஆகிறது நுரையீரல்!
இயற்கையை வென்றுவிட்டதாய்
ஆர்ப்பரிகிரான் !
மருந்தை உணவாக உட்கொள்வது
அறியாமல்!
பேரழிவுக்கு வித்திட்டான்
விஞ்ஞானம் கொண்டு !!
பருவநிலை மாற்றங்களால்
கவலையுற்றாள் பூமாதேவி!
செயற்கையாய் வாழும்
மனிதர்கள் நடுவே!
அயர்ந்து கண்ணுறங்கினாள்
இயற்கையோடு!!