இறப்பு

என்னை ஊற்ற முயல்கிறாள் அவள்
முண்டியடித்துக்கொண்டு நட்சத்திரங்கள் இரண்டு வீழ்கின்றன.
வெளியே கொட்டிக்கிடந்த நான்
அவற்றை சட்டைப்பைக்குள் பாதுகாகின்றேன்
நீண்ட தூரம் நீந்திச்செல்லவெண்டும்
அவை கரைந்துவிடாமல் இருக்கவே .

வழி நெடுகிலும் நிற உலகங்கள்
எதவாது ஒரு உலகத்தை வாங்கிவிட வேண்டும் அவர்களுக்கு
சிரித்துக்கொண்டும் அழுதுகொண்டும் உலகுக்குள் குதிக்கிறது நட்சத்திரங்கள்
அங்கு யாருமில்லை
தனிமையோடு பேசிக்கொண்டிருந்தது

நதியில் வைத்து வீட்டுக்கு சேர்க்கவேண்டும் உலகை
அது அவர்கள் உலகு.

எழுதியவர் : பானுதாசன்- பொத்துவில் -ஜஹா (13-Jan-14, 6:47 pm)
Tanglish : irappu
பார்வை : 39

மேலே