கண்பொத்தி விளையாட்டுகள்
உன் கண்பொத்தி விளையாட்டுகள் என்னை கவருவதில்லை ..
ஒளிந்துகொள்ளும் உன்னை எனக்கு பிடிப்பதும் இல்லை ..
சந்திக்கும் முகங்களில் எல்லாம் உன் சாயல்களை சலித்து ..
முகம் இல்லா விண்ணப்பங்களில் உன் முகவரி அலசி
நட்சதிரங்களை எண்ணியபடியே நிலவொளிக்கு நிற்கிறேன் .....என்
இரவுகள் அம்மாவாசை இருளில் என
அறிந்தும் கூட ..!!!