மோதலை காதலாக்குவது எப்படி

திருமணத்துக்கு பின்னர் ஜோடிகளுக்குள் இணக்குகளும், பிணக்குகளும் ஏற்படுவது சகஜம்தான் என்றாலும், அது முற்றிவிடாமல் இருக்க வேண்டும். அப்படி இருவருக்குள்ளும் ஏற்படும் மோதலை காதலாக்குவது எப்படி? என்பதை இங்கே பார்ப்போம்,

* இருவரிடமும் இருக்கும் அன்பை வெளிப்படையாக, அடிக்கடி வெளிக்காட்ட வேண்டும்.

* இருவருக்குள் யார் பெரியவங்க? என்ற நினைப்போ... அதற்குரிய வார்த்தையோ பரிமாறிக் கொள்ளவே கூடாது.

* இருவரும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசத்தை... காதலை பகிர்ந்து கொண்டால் நல்லது.

* வேலையிலோ அல்லது தொழிலிலோ எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும், இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும், பேசிக் கொள்ளும் நேரத்தை தனியாக ஒதுக்குங்கள்.

* இருவரின் மனதுக்குள்ளும் ஏற்படும் சாதாரண ஈகோ... இறுதியில் பிரிவில் வந்து நிற்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இதனால் தாம்பத்தியமும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* கணவனை மனைவியும், மனைவியை கணவனும் முழுமையாக நம்ப வேண்டும். இல்லாவிட்டால் சந்தேகப் பேய் உங்களை பிரித்துவிடும்.

* தெரியாமல் செய்யும் சின்ன சின்ன குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது. அவற்றை பெரிதாக நினைத்து பேச ஆரம்பித்தால் அதுவே பிரச்சினையாகி விடும்.

* தெரிந்தோ... தெரியாமலோ தவறு செய்தால்... அதை அன்போடு திருத்தப் பாருங்கள். அதற்காக எந்த கடும் சொற்களையும் பயன்படுத்தி விடாதீர்கள்.

* எந்தப் பிரச்சினை வந்தாலும், இருவருக்குள்ளும் எடுத்தெறிஞ்சு பேசி விடவேண்டாம். ஒருவர் மற்றவரின் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாக பேசக்கூடாது.

* நீங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால்... ஈகோ பார்க்காமல் உங்கள் துணையிடம் மன்னிப்பு கேளுங்கள். நீங்கள் கேட்கும் மன்னிப்பே உங்களை அவர்களுடைய மனதுக்குள் பூஜிக்க வைத்துவிடும்.

* எப்போதும்... எங்கேயும்... எதற்காகவும் எதையும் மறைத்து பேச வேண்டாம். மற்றவர்களிடம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உங்கள் ஜோடியிடம் திறந்த மனதுடன் பேசுங்கள்.

* வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி மற்றும் வேறு எதற்காவது உங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டால், "நான் சொல்வதுதான் சரி" என்று வாதாட வேண்டாம். இதனால் வார்த்தைகள் தடித்துவிடும்.

* தாம்பத்தியத்தின் போது உங்களிடம் இருக்கும் செக்ஸ் குறைபாடுகளை மனம் திறந்து சொல்லுங்கள். இதனால் பரஸ்பரம் இருவருக்குள்ளும் ஆறுதல் கிடைக்கும். உங்களுக்காக அவர்கள் விட்டுக் கொடுப்பார்கள்.

* இரண்டு குடும்பங்களைப் பற்றி தரக்குறைவாகவோ... அல்லது மூன்றாம் மனிதர்கள் முன்பாகவோ எப்போதும் எதுவும் பேச வேண்டாம்.

* மற்றவர்கள் முன்னிலையில் உங்களுடைய துணையைப் பற்றி எந்தக் குறையையும் வெளிப்படுத்த வேண்டாம்.

* வீட்டில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் அடுத்தவர் மீது பழி போடாமல் தீர்வுக்கான வழிகளை இருவரும் சேர்ந்தே தேடுங்கள்.

எழுதியவர் : கணேஷ் கா (13-Jan-14, 9:29 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 179

மேலே