இனியொரு சங்கமம்
அறிவியலே ! நீ
ஆராய்ச்சி செய்து பார்
ஆதாமும் ஏவாளும் எமதினமாய் இருக்கக்கூடும்
விழுது விட்டுக் கிளை பரப்பி
திசைகளெட்டைச் சிறைபிடித்தாய்
இருந்த இடம் தமதென்று
பிறந்த இடம் மறந்தனையோ ?
தரணியாண்ட தமிழினமே !
பரணி கேட்டுத் தூங்கினையோ?
வீழ்ந்தவனே ! விழித்தெழு.
களவியலும் கற்பியலும் கற்று
அகமும் புறமுமொன்றி
சாதி மதப் பகையழித்து
தமிழ் மறவர் படை நடத்து.
கருந்தேக்கு நம்மைக்
காளான்கள் மிரட்டுவதோ ?
அயலான் அடுப்புகளில்
நம் மூளை விறகாமோ ?
சீனமென்ன? சிங்களமென்ன ?
ஈனப்பிறவி யாவுமே
நம் ஒற்றுமையின் அணல் பட்டு
வெந்து பொடியாகட்டும்
மான மரபே ! மலையிட்ட தீச்சுடரே !
சங்கமிப்போம் வா பொங்கல் முதல்
---ராசிகவிபாலா.
15 சனவரி 2014