பிரார்த்தனை


கோர விபத்து
வண்டி ஓட்டிச்சென்ற
மகன்
ஒரு வாரமாய்
கண்ணைத் திறக்கவில்லை
மருத்துவமனையில்

திறக்கக்கூடும்
பொறுத்திருப்போம்
என்கிறார்கள்
மருத்துவர்கள்

ஆறுதல்
சொல்லப் போன
எங்களிடம்
பிரார்த்தனை
செய்யுங்கள்
என் மகனை
காப்பாற்ற
கடவுளிடம்
என்றாள் தாய்

எல்லாம் அவன்
செயல் என்றால்
விபத்தை ஏற்படுத்திய
கடவுளை
கண்டிக்காமல்
தண்டிக்காமல்
கொலை செய்ய
முயற்சித்தவனிடமே
காப்பாற்ற கெஞ்சுதல்
முறையா என்று
மனதுக்குள் ஓடியது

நாகரிகம் கருதி
எதுவும் சொல்லவில்லை
அழுதுகொண்டிருக்கும் தாயிடம்

எழுதியவர் : (5-Feb-11, 11:14 am)
சேர்த்தது : வா. நேரு
Tanglish : pirarththanai
பார்வை : 286

மேலே