நாட்டுக்குள்ளே திருவிழா
வேடிக்கையா வாடிக்கையா
நாட்டுக்குள்ளே திருவிழா
மக்கள் பணம் போகுதய்யா
மந்திரி வீட்டில் பெரும்விழா
நேற்றுமில்லை இன்றைக்கில்லை
என்றைக்குத்தான் திருந்துவார்
நம்மிடத்தில் ஒன்றுமில்லா
நிலையை உண்டு பண்ணுவார்
அந்தக்கட்சி இந்தக்கட்சி
எந்தக்கட்சி ஆட்சியில்
மக்களாட்சி என்றார்தம்மில்
மதியில்கறுமை கூட்டுவார்
பார்த்திருக்கும் மக்கள்கூட்டம்
அவர்வீட்டில் ஆட்டுமந்தையாய்
நம்குருதி சிந்தைவைத்து
அவர்தம் பசிபேணுவார்
நாட்டுக்குள்ளே திருவிழா
நமக்கிங்கே ஆப்பு தரும்விழா
-இப்படிக்கு முதல்பக்கம்