காதலும் கத்தரிக்காயும்
யாரடா இவன் ...!
கவிதையில் காதலைத்தவிர
எழுதத்தெரியாதவனா...?
காதலும் கத்தரிக்காயும் என்று
எழுதுகிறான் ...!
போர்குணம் கொண்டவன் தமிழன் ..!
புரட்சியும் தீயும் கொண்ட பாரதியின் பூட்டன் ..!
எங்கே உன் கவிதை ...?
என்னைசுற்றி கழுகுகளும் நரிகளும் சுற்றிக்கொண்டு இருப்பதை யார் அறிவர் ..?
தங்க முலாம் பூசிய சங்கிலியால்
கட்டப்பட்டிருப்பதை யார் அறிவர் ...?
எனக்கும் காலம் வரும் ...?
அப்போது நானும் வீர கவிதை எழுதுவேன் அதுவரை பொறுத்திரு கவிதை தாயே ...!