வருந்தவில்லை வருந்துகிறேன்
எனது
மனதை கொள்ளையடித்த
அவளது
முகநூலை கொள்ளையிட்ட
எனக்கு
புரிய வைத்தது தருணம்
அவள்
பிரிந்து போன காரணம்
புரிந்து கொண்டேன்
அழகு தேவதையை
தெரிந்து கொண்டேன்
இரண்டாம் முகத்தை...
என்
காதலில் பொய்யில்லை
அவள்
காதலில் உண்மையில்லை
என்
காதலுக்காக வருந்தவில்லை
அவள்
காதலுனுக்காக வருந்துகிறேன்
வருந்தவில்லை
என் மனதை கொள்ளையிட்ட
அவள் செயலுக்காக...
வருந்துகிறேன்
அவள் முகநூலை கொள்ளையடித்த
என் செயலுக்காக...