பிள்ளையில்லை

பிள்ளையில்லை
எனக்கு பிள்ளையில்லை ...!!!

நான்தான் மலடானேன்
ஊராரும் உறவினர்களும்தான் நகைக்க ..

பூக்கின்ற காலத்திலே
பூவாமல் போனேனே ...

காய்க்கின்ற காலத்திலே
காய்க்காமல் போனேனே ..

தாலாட்டுபாட நான் இருந்தும்
தொட்டிலிட பிள்ளையில்லை ...

வாரிஅணைக்க கைகள் இருந்தும்
வாகாய் பிள்ளையில்லை ...

முதுகினிலே டோலிகட்டி
மூச்சு முட்ட அணைக்க பிள்ளையில்லை ...

வட்டிலிலே சோறு போட்டால்
வாரி உண்ண பிள்ளையில்லை ....

தட்டினிலே போட்ட சோற்றை
இறைத்து உண்ண பிள்ளையில்லை ...

பரந்த கூடத்திலே
பாங்குடன் விளையாட பிள்ளையில்லை ...

பாத்து பாத்து கட்டின வீட்டில
பாசமாய் இருக்க பிள்ளையில்லை ....

மழை பெய்த முற்றத்திலே
மண் ணளைய பிள்ளையில்லை ....

வீட்டுல இருக்கும் சாமானை
வீதியில போட்டுடைக்க பிள்ளையில்லை ..

தவமாய் நான் கிடக்க
தவழ பிள்ளையில்லை ......

என் தரத்துப் பெண்களெல்லாம்
எழிலான பிள்ளைகளுக்கு தாயானார் ...

பிள்ளையில்லா வீடென்றால்
பிச்சைக்கூட வாங்கார் ........

இடுகாடு நான் போனாலும்
கொள்ளி வைக்க நாதியில்லை .....

அன்னை நான் இருக்க
அம்மா என அழைக்க பிள்ளையில்லை ...

நான்தான் மலடானேன் ........!!!!

எழுதியவர் : umamaheshwari kannan (16-Jan-14, 10:25 pm)
Tanglish : pillaiyillai
பார்வை : 1948

மேலே