எப்படி எல்லாம் இருக்காங்க
ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.
அங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,
"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா,மாப்பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?"
கொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,
"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க." அப்படின்னுதான் சொன்னேன்.
அதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,
"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். .."