வெளிநாட்டிலிருந்து ஓர் ஊரான்

திரும்புகின்ற பக்கமெல்லாம் கேள்விக்கனைகளாகவே இருந்தன.....
எப்ப கல்யாணம்? எப்ப ஊருக்கு வர்ற...பதில் சொல்லியே அழுத்திடுச்சி...ஆளுக்கொரு பதில் சொல்லி சமாளிக்கவே களைச்சிடுதுப்பா...இப்பவெல்லாம் ஊரு நம்பர போன்ல் பார்த்தாலே ஏதோ ஒரு வெறுப்போடுதான் அழைப்புக்கு விடைதருகிறோம்....

என்னப்பா ஒ/லெவல் செஞ்சிட்ட என்ன பண்ணப்போற...ஏ/லெவல் முடிச்சிட்ட அப்புறம் என்ன? எப்பதாம்பா படிப்ப முடிச்சி வேலைக்கு பெயித்து குடும்பத்த காப்பாத்தபோற?
இவையெல்லாம் எனக்கு முன்னர் விடுக்கப்பட்ட வினாக்கள். ஏதோ என்னால முடிஞ்ச அளவு கொஞ்சம் நல்லாவே விடையளித்திருக்கிறேன்...

எல்லோருக்கும் போலவே வீட்டு கட்டுமாணம், சகோதரிகளின் திருமணங்கள், சகோதரர்களின் படிப்புக்கள் என பொறுப்புக்களும் என்னோடே கூடவே பிறந்தன. காலத்துக்கு காலம் வரும் சொந்தங்களினதும் பந்தங்களினதும் தேவைகளுக்கும் பல குறுந்தொகைகள் தேவைப்படும். இருக்கும் போது உதவத்தனே வேண்டும். அவர்களில் சிலர் எனக்குதவியதும் இன்று நான் அவர்களுக்கு உதவுவதும் வாழ்க்கை ஒரு வட்டமென்பதை மிக இலகுவாக எனக்கு சொல்லித்தந்தது.

என் குறிக்கோல்களுக்கு எல்லைகள் இருப்பதாக தெரியவில்லை. அது பற்றி எனக்கும் கவலையும் இல்லை. அடிக்கடி "...அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும் அந்த வானம் போல் சிலபேர் சொந்த வாழ்க்கையும் இருக்கும்..."என்ற வரிகளில் நான் இழயித்துப்போகிறேன். என்ன ஒரு கற்பனை என்ன ஒரு கவி நடை..ஆச்சரியம் ஆச்சரியம்

எங்கிருந்து வந்ததோ இந்த அக்கறை இன்று? இல்லை இது அவர்களது கேள்வித்தொடரணியில் வெறும் வழக்கமான கேள்வி போலத்தான் புரிகிறது இன்று எனக்கு....
"எப்ப கலியாணம் பண்ணப்போற?"
"வயசும் போயிட்டே இருக்கல்ல...!!!"

ஊரைப்பற்றியோ, வேறு யாரைப்பற்றியுமோ அல்லது பாலாப்போன சம்பிரதாயங்களைப்பற்றியோ எனக்கு கிஞ்சித்தும் வறுத்தம் கிடையாது...எல்லாம் என் பெற்றோரைப்பற்றித்தான். கஷ்டத்தையும் கண்ணீரையும் தமக்குள் அடக்கிக்கொண்டு சந்தோசத்தை எனக்களித்தவர்கள் அவர்கள். பொறுப்புக்களை சுமந்து நான் வெளிநாடு வருவதில் என் தாய்க்கோ அவ்வளவு விருப்பம் கிடையாது. தந்தையும் என்ன செய்வது, வயசான காலத்தில் சுமைகளை தனியாக சுமக்க முடியாமல்... ஒவ்வொரு முறை என் தாயோடு தொலைபேசியில் பேசும்போதெல்லாம் அவள் தொனியில் "எப்ப வருகிறாய் எப்ப வருகிறாய்" என்ற ஏக்க கேள்வி எனக்கும் புரிகிறது. ஆனால் அவளோ வாய் திறந்து கேட்கமுடியாமல், நாட்களை மட்டும் எண்ணியவளாய்.

ஆமாம் ஏன் நான் அங்கே போய் வற முடியாது?
ரொமப்வே ஞாயமான கேள்விதான். எனக்கும் விருப்பம்தான் போய் வருவதற்கு என் தாய் நாட்டுக்கு. என் தாயின் மடிக்கு....

ஆயினும் அந்த பழைய கொடூர நினைவுகள் என் கண் முன் வந்து நிற்கும்போதெல்லாம் ஏதோ ஒரு வெறுப்பு....
அந்த பாலாப்போன அர்த்தமற்ற பாரம்பரியங்களோடும் சம்பிரதாயங்களோடும் வாழ்வதற்கு பிடிக்கவில்லை. பலவகையிலும் அது என்னை பாதித்திருக்கிறது. ஏழை என்ற பாகுபாடு, குலம் என்ற வேறுபாடு, தற்பொழுது மதம் பிடித்துள்ள மதம் என்ற வேறுபாடு அதனோடு சேர்த்து வயது வித்தியாசம் இல்லாததால் கொன்றொழிக்கப்பட்ட என் காதல் என பல கொடூரக்கொலைகளை அது அந்த மண்ணில் பதித்திருக்கிறது. அங்கே நான் எப்படி கால் தடம் பதித்து நடப்பது? சந்தோசமாக இருப்பது.
சம்பாதிப்பதும் சேமிப்பதும் கொஞ்சம் என இருந்தாலும் இந்த அதிவேக வாழ்வில் ஏதோ காலம் அமைதியாக நகர்கிறது

இனியும் என்னை தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம். என் குழந்தைகளை நான் என்னைப்போல் துன்புற அனுமதிக்க முடியாது. அந்த இறைவனின் நாட்டம் இருந்தால் நான் ஒரு நாள் அங்கு வரலாம். அன்றைய நாள் எமது நாட்கள் போல இருக்கமால் வெளிச்ச நாட்களாக இருக்க வேண்டும்.மரணித்தவர்களிடம் கல்லறைகளில் அல்லது நீரலைகளில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மரணித்தவர்களுக்கு நான் மன்னிப்பளித்துவிட்டேன்.
இறைவனின் சந்நிதானத்தில் மீண்டும் நாம் சந்திக்கவேண்டும் அச்சிறு மழலையாக என் தாயின் மடியில்...
ஓடித்திரியும் சிறுவனாக என் தந்தையின் தோளில்...
அதுவரை நான் காத்துக்கிடக்கிறேன்...
தனியாகவே நடக்கிறேன்....
சீக்கிரமே வரட்டும் அந்த நாட்கள்.....

இப்படிக்கு அன்புடன்
"ஒரு மகன்"

எழுதியவர் : Rikas Marzook (17-Jan-14, 10:07 pm)
சேர்த்தது : Rikas Marzook
பார்வை : 105

மேலே