விடுகதைகள்-61-70
61.என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்
நான் யார்?
62.நான் நானாக இருப்பேன்
நான் யாரென்று தெரிந்த பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?
63.பசிக்கு தீனி தந்தால் குஷிதான்.
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடிவிடுவேன்
நான் யார்?
64.நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென
நான் யார்?
65.உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடர்ந்து வருவேன்.
ஆனால் ஒருபோதும் மேலே போக மாட்டேன்
66.என் உடல் முழுவதும் காற்று
ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன்
நான் யார்?
67.என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல்.
தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை.
நான் மறைக்கப்பட வேண்டியவன்.
நான் யார்?
68.நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
69.மேலே மட்டுமே போவேன்;கீழே வரமாட்டேன்
நான் யார்?
70.ஏழைகளிடம் இருப்பவன்;பணக்காரர்களுக்குத் தேவைப்படுபவன்
நான் யார்?