அதே காதலுடன்

உன்னோடு பேசாத
ஒவ்வொரு நிமிடமும்
என் மனதோடு
நான் கொண்ட கோபம்....

காதலிக்க
கற்றுக்கொடுத்தாய்
கனவிலும் என்னை
தொடர்ந்து வந்தாய்..........

புரிதல் ஏதுமின்றி
நீ நடந்ததால்
உன் `எண்ணை`
தொலைத்தேன் விருப்பமின்றி.....

இன்று அழைப்பை எடுக்க
குறுகுறுக்கும் என்னிதயம்
உன் அழைப்பிலக்கமின்றி
தடுமாறுகிறது அதே காதலுடன் ....!!

எழுதியவர் : கலை பாரதி (18-Jan-14, 6:36 pm)
Tanglish : athey KADHALUDAN
பார்வை : 106

மேலே