பட்டப்பெயர் கிராமத்துப் பக்கம்
பெற்றோர் வைத்த பெயர் மறந்தே போச்சி
பட்டப்பெயர் மட்டுமே இங்கு பிரபலம் ஆச்சி
குள்ளமாக இருந்த குமரேசன் வாத்து ஆனான்
உயரமாக இருந்த நெடுமாறன் ஒட்டகம் ஆனான்
நல்லகண்ணு இங்கு பொட்டகண்ணு ஆனான்
நடேசன் என்ன சொல்வேன் நட்டு ஆனான்
பட்டப் பெயர் வைச்சாலும் பசங்க நாங்க நல்லவங்க
பொது பிரச்சினை வரும்போது போரிட்டு ஜெயிப்போமுங்க
அவசர உதவிக்கு அடிச்சி ஓடி வருவோமுங்க
அரசியல் வந்திட்டா அடிபிடியும் போடுவோமுங்க
ஊருக்கு உ தவுவதில் உதவும் கரங்கள்
உரிமையோடு கேட்பதில் நியாயக் கரங்கள்
ஜாதிமதம் கடந்த நல்ல கரங்கள்
சாதிக்க பிறந்ததம்மா இந்த கரங்கள்
எங்களுக்கு -
பெற்றோர் வைத்த பெயர் மறந்தே போச்சி
பட்டப்பெயர் மட்டுமே இங்கு பிரபலம் ஆச்சி .