முத்தின் முகவரி

கவிதைப் பெருங்காட்டில்
கற்பனைக்குத் தீ மூட்டி

கவிதையொன்றும் காணாது
கை விரித்துத் திரும்பினேன்
கவிஞனென்று பேர் சூட்டி

உவமைக் கவிஞரும்
உம்மென்றிருந்தார்

உவமானம் கிட்டவில்லை
அவமானம். என்றார்

வெகுமானம் யாதெனினும்
வேண்டுமட்டும் தருகிறேன்
யாரேனும் பாடுங்கள்
என்னவளைப் பற்றி என்றேன்

ஒரு கவிஞன் குறுக்கிட்டான்
உன்னவளைக் காண்பி என்றான்

அல்லித் தண்டவள்
ஆண் கொள்ளிச் செண்டவள்

ரத்தச் சிவப்பினள்
ராகமாளிகை

அத்தரும் சவ்வாதும்
அவள் வியர்வை-

சிந்திய வெண்பனிக்கும்
சீரிய முத்துக்கும் அவளுவமை

ஒரு சொல் கட்டுரை
ஒரு நூல் நூலகம்
முற்போக்குக் கவிஞன் வந்தான்
முடிவாய்ச் சொல்
முகவரி யாதென்றான்

எலி தன் வலைக்குள்ளே
ஒளித்து வைத்த நெல் மணியாய்
அவள் என் நல் முத்து .
அவளுக்கு நானே முகவரி என்றேன்.

..............................................
பித்தனென்று கூறி
பிரிந்து சென்றனர் கவிஞர்கள்

எழுதியவர் : ராசைக் கவிபாலா (21-Jan-14, 2:52 pm)
பார்வை : 62

மேலே