என் பொன்பெண் மகள்
நாடகமாடுகிறது இந்த பெண் குழந்தை
தாயிடம் பூனையாய் தந்தையிடம் பொம்மையாய்
உண்மைக்கோர் முனைப்பு தீதற்ற கள்ளப்பிள்ளை
இப் பெண்குழந்தை உதாரபுருஷ செல்லப் பிள்ளை
மௌனித்துக் கொள்ளும் மௌன தாங்கியிது
முறைப்படுகளற்ற கறையில்லா குழந்தை
முந்தானை முழு நிலவாய் வீட்டில்-எந்தானையில்
பாவலனை மட்டுமே நினைத்தவளாய் !
இரவு பகலாய் அழைப்பிலே அட்டகாசம்
யாரென்று அம்மா கேட்டால் அண்டி என்பாள்
கதை இடையே அப்பா வந்தால் நழுவிடுவாள்
அண்ணா வந்தால் அப்பாவியாய் விலகிடுவாள்
மௌனியின் மாராப்பு பெற்றோருக்கு ஆப்பு
அலை பேசி ஒழித்து வைக்கும் காப்பகம் மாராப்பு
அத்தானை ஒழித்து பேசும் அலை பேசியால்
தயாராகிறாள் ஓடிப் போய் அலைக்கழிய!!!
பொன் என்று நினைத்திருக்கும் இப்பெண்மகள்
எப்படிக் கண்ணாய்க் காத்தாலும் பார்த்தாலும்
அலைபேசி காதலால் அலைக்கழிந்தே போகிறாள்
அன்னியோன்னிய உறவிழந்த குழந்தையாய் !!!