உதாரணம்
வீட்டுப்பிராணிகளும் காட்டுவிலங்குகளும்,
ஒன்றாய் இருக்க வாய்ப்பேயில்லை !
பிறகெப்படி ஒத்துப்போனதென்றே தெரியவில்லை !
உனக்கும் எனக்கும் உண்மையில் !
யோசித்துப் பார்க்கிறேன் ஆழமாய் !
சிலநேரங்களில்,
குருவிகள் அமர்ந்திருப்பதில்லையா?
எருமைகளின்மேல் !!