குப்பைக் குவியல்
![](https://eluthu.com/images/loading.gif)
உரித்துக் கழித்த
பிளாஸ்டிக் உரைகள் பரவிக் கிடக்கிறது.
உடைத்துப் போட்ட
கண்ணாடி சிதறல் சிதறிக் கிடக்கிறது.
பிளாஸ்டிக் பையில் கட்டிப் போட்ட
பொருள்கள் அழுகி ( றது ) .
உணவருந்தி உதறிப் போட்ட
இலைகள் (பிளாஸ்டிக்) குவிகிறது.
நீ உடலைக் கழுவி உமிழ்ந்து போட்ட
உண்ணீர் அருவெருக்கிறது.
உனக்காக உழைப்பவன் வாழ்வு
கண்ணீர் சொரிகிறது.
எல்லோரும் போடும் குப்பை
இமயம் தொடுகிறது.
இவை எடுத்துப் போட எவன் வருவான்
எனும் ஏக்கம் புரிகிறது.
வருங்கால சந்ததிகள்
வழியில் குப்பைகளா?
வாரி வாரி வாயில் போட்டால்
வளரும் தொப்பைகளா?
அவரவர் கழிவை அவரவர் சுத்தம்
செய்தால் அனைத்தும் சுத்தமடா!
அனைவரும் கூடி முடிவெடுத்தால்
அகிலம் சுத்தமடா!
கோழி கழிவும்,கொசுவின் கடியும்
உயிரை வதை க்குதடா!
பேட்டை முதல் கோட்டை வரை
குப்பை சிரிக்குதடா.
போடும் குப்பை பொது வென
நினைத்தால் மனதும் குப்பையடா.
குப்பை போட்டு,குப்பை போட்டு,
குவலயம் நாறுதடா.
குணக் குன்றே,குன்றின் மணியே,
இதற்கு தீர்வு வேண்டுமடா.
குணம் உள்ளோர் ,கூடி வந்து
குவலயம் மாற்றுவோமடா!