இது போதும்
இதமான இந்தக் குளிரில்
மூடிக் கொள்ள போர்வை வேண்டாம்
காதில் கட்டிக் கொள்ள
துண்டு வேண்டாம்...
முழுக் குளிரையும் தாங்க
ஸ்வெட்டர் வேண்டாம்....
அன்பான உனது தோள் போதும்...
காதோரம் சுருண்டு தொங்கும்
உன் குட்டிக் கூந்தலின்
ஸ்பரிசம் போதும்....
அனுசரணையான
உன் வார்த்தைகள் போதும்....