நன்றிகள் தோழமைகளே

தோழமைகளுக்கு வணக்கம்....!

இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டியில் கலந்துகொண்டு போட்டியினை சிறப்பித்து தந்ததற்கு மிக்க நன்றிகள்...!

தோழமைகள் அனைவரும் கவிதையை சிறப்பாக எழுதி இருந்தார்கள், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை எழுத்துக்களில் காட்டி இருந்தார்கள், அனைவர்களின் தமிழ் ஆர்வத்தைக் கண்டு திருவிழாக்குழு மிகுந்த சந்தோசம் அடைந்தது.

அனைவரும் நன்றாகவே எழுதி இருந்தார்கள் ஆனால் பரிசு மூன்றுதான் என்பதால், சிறந்த படைப்பை தேர்வு செய்யும் பணியை நடுவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள், பரிசு பெற போகிறவர்கள் யாராயினும் அவர்கள் நம் தோழமைகளே... ஆகையால் பரிசு பெறுபவர்களை மனதார பாராட்டி மகிழ்விப்பதென்பதே நமது கடமையாக கொள்ள வேண்டும், அதுதான் உண்மையான நட்பிற்கு அஸ்திவாரம் ஆகும்.

நிறைய தோழமைகள் விதிமுறைகளை மீறி எழுதி இருந்தார்கள், குறிப்பாக; அதிகமான வரிகள், சொன்ன கருவிற்கும் படைப்பிற்கும் சம்பந்தம் இல்லாமலும் நிறைய படைப்புகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது, விதிமுறைகள் எதற்காக என்றால் அது கவிதைகள் எழுதுவதற்கான பயிற்சிக்கு அவசியம் என்பதால், கரு சிதையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கவிதை கவிதையாக இருக்க வேண்டும் என்பதற்கா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் விதிமுறைகள் மீறபட்டும், கருக்கும் கருத்திற்கும் சம்பந்தமில்லாத படைப்புகளும் தேர்விற்கு எடுத்துகொள்ளப்படவில்லை என்பதை கூறிக்கொள்கிறோம், அதற்காக தோழமைகள் யாரும் வருத்தம்கொள்ள வேண்டாம், உங்களுக்கான மேடைகளும், பரிசுகளும், பட்டங்களும் உங்களுக்காகவே காத்திருக்கிறது, அதை உங்களைத்தவிர வேறு யாராலும் அடைந்துவிட முடியாது, அத்தகய இலக்கை நோக்கி நீங்கள் நகருவதற்கு ஒரு சிறு உந்து சக்தியாக இந்த கவிதை போட்டி இருக்குமேயானால் அதற்காக நாங்கள் ஆனந்தம் அடைவோம், இந்த போட்டி நடத்துவதற்கு எங்களுக்கு எந்த சுயநலமோ, உள்நோக்கமோ சிறிதும் கிடையாது, தமிழ்மீது நாங்கள் வைத்திருக்கும் நேசிப்பே இந்த கவிதை போட்டிக்கான முதல் காரணம்.

நடுவர்களின் மேற்பார்வையில் முதல்கட்ட தேர்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது, முதல் கட்ட தேர்வு, இரண்டாம்கட்ட தேர்வு, மூன்றாம்கட்ட தேர்வுகள் முடிவடைந்த பிறகே இந்த மாதம் 30 ஆம் தேதி இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும், அதுவரை பொறுமை காத்திருங்கள், பரிசு பெறப்போகும் உங்களில் ஒருவர்களான சகத் தோழர்களின் மனங்கள் உங்கள் பாராட்டுதளால் மகிழ்ச்சிக்கொள்ளட்டும்.

எங்களோடு இணைந்து இந்த போட்டியை சிறப்பாக நடத்தி தந்த உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.


இப்படிக்கு
திருவிழாக்குழு.

எழுதியவர் : திருவிழாக்குழு. (22-Jan-14, 3:15 pm)
பார்வை : 181

மேலே