தை பிறந்ததால் வழி பிறக்கட்டும்

தைமகள் வந்து விட்டாள்
பருவப்பெண்ணே

உன்னை பெண் கேட்டு
வந்திடுவான் தாய்மாமன்
பருவப்பெண்ணே

நீ கண்ட கனவெல்லாம்
பருவப்பெண்ணே

நனவாகப் போகுதம்மா
பருவப்பெண்ணே

கன‌வோடு வாழ்ந்த காலம்
போதும் பெண்ணே

உன் கண்ணோடு கவி பாட
வந்துவிட்டான் மாமனவன்
பருவப்பெண்ணே

பளிங்கு போன்ற சிரிப்பினிலே
பருவப்பெண்ணே

உன்னை படம் பிடிக்க
வந்துவிட்டான்
பருவப்பெண்ணே

தாலி ஒண்ணு தந்திடுவான்
பருவப்பெண்ணே

தரணி போற்ற வாழ்ந்துவிடு
பருவப்பெண்ணே

தவறாமல் சேதி சொல்லு
நானும் வாரேன்.........

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (22-Jan-14, 5:47 pm)
பார்வை : 271

மேலே