சாத்தியங்கள்
காலத்தை உணர்ந்தவர்கள்
கட்டி வைத்த குட்டிச்சுவர்களை
வாரிசுகளில்லாமல் ஆளுகிறார்கள்
வருத்தபடாத வாலிபர்கள்!...
ஊழல் இல்லாத ஆளுகை
இங்கு மட்டுமே சாத்தியமாகிறது!...
தூரிகைகளால்
குழந்தை வரைந்த மனிதன்
சில வட்டங்கள் இணைந்ததும்
சிரிக்கிறான்!..
அழுகிறான்!..
சிவப்பில் வரைந்த கோடுகளில்
சினம் கொள்ளுகிறான்!..
சாதல் இல்லாத மனிதம்
இங்கு மட்டுமே சாத்தியமாகிறது!...
வன்புணர்வு செய்தி கண்டு
பொங்கியெழுந்த கோபத்தீ
கொழுந்து விட்டு எரிந்தது
அடுத்த செய்தி படிக்கும் வரை...
எதிர்ப்பை வெளிக்காட்டாமல்
எதிர்ப்பும் இல்லாமல்
அணையும் நெருப்பு
இங்கு மட்டுமே சாத்தியமாகிறது!...
காலமெல்லாம்
காலில் மிதிபட்ட மண்
செத்தவுடன்
மேலேறிப் படுத்துக் கொள்கிறது!...
ஒவ்வொரு செயலுக்கும்
எதிர் விளைவு உண்டாம்!...
நியூட்டனின் விதிகள்
இங்கும் கூட சாத்தியமாகிறது!...
இந்த
சாத்தியங்கள்
சங்கடத்தில் உள்ளன - வெறும்
சடங்குகளாக பார்க்கப்படுவதாக – அவை
ஏட்டில் ஏறினாலும் - அதை
மாற்றி எழுதவும் சாத்தியமிருப்பதை
மறந்து விட்டு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)