- கருத்திலே பூத்ததுதிருமதி யுவஸ்ரீ நடராஜனுக்குப் பாராட்டு
இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துகின்றது என்பதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப் படுகிறது.
புதுக்கவிதையில் இக்கருத்தைத் தந்துள்ள [பாடல் எண்: 173084] யுவஸ்ரீ நடராஜன் பாராட்டுக்குரியவர்.
கீழே வருவது அதன் மரபு (வெண்பா) வடிவமே!
இனிக் கவிதை:
கூர்வாள் துளையிட்டுக் கொல்லினும் கீழ்விழ
மார்பினில் மண்பட மாய்கிலேன்!-நேர்வந்த
உன்கண் இமைகளோ ஓரா யிரம்வாளாய்
என்கண் வருத்தத்,தாங் கேன்!
கூர்வாள் துளையிட்டுக் கொல்லினும் கீழ்விழ
மார்பினில் மண்பட மாய்கிலேன்!--நேர்வந்தே
உன்,கண் இமைகளோ ஓரா யிரம்,ஈட்டி
என்ன விழுகின்ற ஏன்?
===