இரு பாலருக்கும்
நேரில் கண்டேன்
நெறி தவறி ய ஒழுக்கத்தை
எதிர்க்க நினைத்தேன்
வேகத்தோடு
எதிர்த்தேன் முழுமையாக
ஆத்திரத்துடன் .
கண்டித்தேன் ஏகத்தில்
கோபத்துடன்
இருவரும் சிரித்தனர்
என்னைப் பார்த்து
போ போ புரியாதவளே
இது எல்லாம் நடக்கிறது
விரிவாக எங்கும்.
உனக்குத் தெரியவில்லையென்றால்
நாங்கள் பொறுப்பல்ல
என்று சொல்லி அணைத்தப் ப்படி
விலகினர் அவ்விடத்தை விட்டு .
கலாச்சாரம் எங்கே செல்கிறது?
கற்பு என்று ஒன்று இருக்கிறதா ?
இரு பாலருக்கும் .