காதல் எதற்கு

அடித்தாலும் அழுதாலும்
பாசமான சகோதரி

மறுபடி அணைப்பதற்கு!

கோபத்தில் கூட
கெடுதல் செய்யாத தந்தை

மறுபடி உதவுவதற்கு!

திட்டினாலும் நாம்
அழும்போது அழும் தாய்

பாசத்தை கொட்டுவதற்கு!

சண்டை போட்டாலும் நம்
நலம் விரும்பும் அண்ணன்

மனம் புரிந்து கொடுப்பதற்கு!

உயிரோடு உறவாக
நண்பர்கள் நம்முடன் இருக்க!

வெறும் கனவுகளை மட்டும்
சொந்தமாக்கும்
காதல் எதற்கு!!!!!!!!!!!!

எழுதியவர் : ப்ரியா (23-Jan-14, 3:09 pm)
Tanglish : kaadhal etharkku
பார்வை : 130

மேலே