இதோ இப்போது முடிந்துவிடும்
இதோ இப்போது முடிந்துவிடும்...
ஓடிக்கொண்டே இருக்கிறேன்...
குருதிக் கொட்டிக் கொண்டேயிருக்கிறது...
ரணங்கள் இன்னும் ரணங்களாகவே இருக்கின்றன...
மருந்தென்று ஏதும் இதற்கு இல்லை...
தேவையும் இல்லை...
இன்னும் கொஞ்ச தூரம் தான்...
கண்கள் செருகிக் கொண்டே வருகின்றன...
விழுந்து விடுவேனோ??
விழமாட்டேன் விழவே மாட்டேன்...
இதோ பயணம் முடிந்து விடப்போகிறது...
உளைச்சல்கள் உதிர்ந்து விடப்போகின்றன
இதற்கு முன் சிலமுறை
என் தேகம் உதிர்ந்ததைப் போலவே !!
களைப்பாய் இருக்கிறது...
கூட்டத்தில் ஒளிந்துக் கொள்ளட்டுமா??
கண்டுபிடித்து விடுமா?
தீண்டி விட துரத்தி வரும்
தீராத நோய் ஒன்று...
குருதிக் கொட்டிக் கொண்டேயிருக்கிறது...
ஓடிக்கொண்டே இருக்கிறேன்...
இதோ இப்போது முடிந்துவிடும்...!