மனதை இனிமையாக்கும் தூய நட்பு

பழகும்போது பசுமை மட்டும் காட்சியாகும்
பேசும்போது இனிமை இனிய ஓசையாகும்
நிகழ்வுகள் எல்லாம் வாழ்வில் இனிமையாகும்
நொடிகளும் நம்பிக்கையளிக்கும் தூய நட்பினிலே!

நெடுநாட்கள் கழித்த பின்பும் சந்திப்பிலும்
சில நொடிகள் பேசுகிற நேரத்திலும்
தூரத்திலிருந்து கையசைத்துச் சென்ற போதிலும்
மகிழ்ச்சி தொடர்ந்திருக்கும் தூய நட்பினிலே!

நிகழ்ந்திருந்த பசுமையான நிகழ்வுகள் எல்லாம்
மனங்களிலே மின்னலிடும் பொழுதுகள் பல
இவை அனைத்தும் நிலைத்திருக்கும் எப்பொழுதும்
நல்ல நண்பர்களை நினைக்கின்ற நினைவினிலும்!

எழுதியவர் : ஹெச். தவ்பீக் அலி (24-Jan-14, 7:14 pm)
பார்வை : 306

மேலே