இருட்டினில் மறைந்த சூரியனே -- மணியன்

இள நகை நிலவு
முக நிலை கண்டு
இருட்டினில் மறைந்த சூரியனே. . .
மேக வலையினில்
விண்மீன்கள் சிக்கிட
தலை தெறித் தெங்கே ஓடி விட்டாய். . .
தக தக தக என
சுடர் ஒளி வீசி
தளர் நிலை தந்த சூரியனே. . .
பட பட குளிரில்
வெட வெடத் தெங்கே ஒழிந்து கொண்டாய். . .
குளிர் நில வொளியின்
வெளிர் நிறம் பட்டு
பனியாய் நீயும் படர்ந்தனையோ ! ! . . .
நிலவது நீங்க
பளீரென மறைந்து பகலவனாகினையோ ! ! , . .
கவிஞர்கள் பலரும்
காவியம் புனைந்திட
இருட்டினில் கண் விழிப்பதுவோ. . . .
புற மெல்லாம் குளிர்ச்சி
பகர்ந்தால் உனையும்
புலவர்கள் போற்றிப் புகழ்வனரே. . . .
உழைத்திடும் மாந்தர்
வியர்வையாய் நீயும்
பகலிலும் பனியாய் நீயும் விளைந்தனையோ. .
விளைச்சலில் வியர்வையை
மருகிடச் செய்து பொன்னாய்
மாறிடச் செய்குவாயே. . . . .