ஒளியில் மெல்ல அசைந்து
பட்டு தாவணியில் பவனி வரும் பசுமையே!
இளம் பருவம் சுமந்து பறக்கும் பட்டு பூச்சியே!
நிலவு ஒளியில் மெல்ல அசைந்து செல்லும் மேகமே!
பஞ்சு போல் பூமி மீது நடந்து செல்லும் அன்னமே!
இரவில் உறக்கம் காணாமல் போனது
நிலவே பகலில் நீ வருவதாலா!
பகலில் பூமியெங்கும் இருளாய் போனது
நிலவே உன் ஒளி என் கண்ணில் பட்டதாலா!
கருவறையில் இருக்கும் அமைதி!
நம் காதலால் பிறக்கப்போகும் அமைதி!
அதை உன் கண்ணில் கண்டதால் எனக்கு நிம்மதி!
இது இறைவன் என்னக்கு கொடுத்த வெகுமதி!
பக்குவப்பட்டது அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்தெடுக்கும் வண்ணம்
என்னை உன் பக்கத்தில் வரவழைத்தது உன்
மௌனம்
நீ தான் என்றும் எனக்கு பிடித்த சொர்ணம்
என் காதல் உனக்குள் பூத்த விதம்!
என் தாய் இறைவனிடம் எனக்காய் செய்த தவம்!
அவள் கையில் நான் மகனாய் பிறந்த வரம்!
என்றோ செய்த தவம் உன் காதல் என் இதயத்தில் பூத்த வரம்!
ஆயிரம் வருடங்கள் வாழ்ந்ததாக நினைக்கின்றேன்!
அரை நொடியில் உன் கண்ணில் அதை காண்கின்றேன்!
ஆற்று தண்ணீரில் அடித்து செல்கின்றேன்!
அலறல் கேட்டு உன் இதயம் சிவந்ததை முகத்தில் பார்க்கின்றேன்!
காதலில் பேதமில்லை!
கருவறையில் ஜாதி இல்லை!
நீ எனக்குள் வந்தது எனக்கே தெரியவில்லை!
கண் இமை மூடினாலும் உன் அழகு முகம் மறையவில்லை!
காத்திருக்கும் உன் கண்விழிக்கு
வானவில்லாக!
என் இதயத்தை இயங்க வைக்கும் உன் உயிருக்கு
சுவாச காற்றாக!
இறுதிவரை உன்னுடன் சேர்ந்து வாழ!
இரு மாலையோடு உன் கை பிடித்திடுவேன்!
என் காதலை இதயத்தில் சுமப்பவளே!
இதய தாமரையில் ஒளி வீசும் என் சூரியனே!