பூமிக்கு இயக்கமே இல்லை

ஆறாதொரு கனமில்லை
ரணமில்லை-நாலாதிசையிலும்
ஆறுதலெனும் ஒன்றன்றி
பூமிக்கு இயக்கமே இல்லை!
_
சிசுவுக்காறுதல்முலைப்பால்
கதகதப்பு...;
_
சிறார்காறுதல்முயல்போல்
பரபரப்பு...;
_
இளமைக்காறுதல் எதிர்பால்
அரவணைப்பு...;
_
காதலுக்காறுதல்
வாழ்வெலாம்
பிணைந்திருப்பு...;
_
நிகழ்வாழக்கைக்காறுதல்
மனைசுக மகிழ்வளிப்பு...;
_
வாழ்வதற்காறுதல் தன் வித்ததை வளர்த்தெடுப்பு...;
_
முதுமைக்காறுதல் தன் பிள்ளைகளின் வாழ்வெடுப்பு...;
_
மரணத்துக்காறுதல் என்றும் வாழ்வில் ஆறுதல் தருணங்கள்
இருந்திருப்பு...
_
கேளடா மானிடா
ஆறாதொரு கனமில்லை
ரணமில்லை- நாலாதிசையிலும்
ஆறுதலென்று ஒன்றன்றி பூமிக்கு இயக்கமே இல்லை!

எழுதியவர் : Akramshaaa (25-Jan-14, 6:56 am)
பார்வை : 65

மேலே