பொதி சுமந்த கழுதைகள் - மணியன்
தா யி ன் ம ணி க் கொ டி
தமிழனுக்கும் அதுதானே
தொ ப் பு ள் கொ டி ! !
பேதமை பாரா
தாயகம் தன்னில்
வேதனை வந்ததுமேன் ?
உழுகின்ற உழவனின்
மண் புழுவாகினும்
உதவிடும் மனமெங்கே ?
அழுகின்ற குரல்களில்
விழுகின்ற கண்ணீர்
வங்காள விரிகுடாவா ?
நடை பழகா முன்
படை பல பார்த்த
உன்
பராக்கிரமம் தான் பொய்யோ ?
தடை என்ன தமிழா
விடை கொடு நீயும்
பாவப் பொதி சுமந்த
கழுதை யர்க்கு . . .
விழ கூடா தமிழா
இனி
விழக் கூடும் கயவர்கள்
உன்
இமை எனும் கொடி அசைந்தே. . . . .