பாய் இடைப் பின்னல் - மணியன்

வாய் நிறையச் சோறு வைத்து
வட்ட நிலா தான் பார்த்து
வையகமே விழித்தெழு, , , வாய் !

தாய் கண்ட மகவு நீயும்
தானைத் தமிழர் துயர் துடைக்க
தாளு டைத்து வரப்பிறந் . . . தாய் ! !

தேன் மதுரத் தமிழ் ஓலமாய்
திசை எங்கும் ஒலிக்கக் கேட்டும்
தேற்று கின்ற வழி மறந்த . . . தேன் ! ! !

பாய் உடைப் பின்னல் உனை
நார் நாராய்ப் பிரிக்க வந்தால்
வேர் அறுத்தவர் விழவும் வைப். . . பாய் !!!

ஊற்று கின்ற புஜ வலிமை
பெற்று வந்த உன் புலமை
கற்று தந்த தமிழ்ப் பால் . . . ஊற்று !!

நட்டு வளர் கதிரும் ஆகி
நாளும் வளர் நிலவும் ஆகி
நிமிர்ந்து விடு நீயும் இனி

வெற்றி எனும் கொடியும் . . . நட்டு. ! ! !

எழுதியவர் : மல்லி மணியன் (25-Jan-14, 8:58 am)
பார்வை : 168

மேலே