இப்படித்தான் உலகமோ

எப்போதும்
தொட்டதற்கெல்லாம்
அந்த `ஒருவர்தான்`
வாய்க்கு அவலாக.....!

கூட்டத்து `மூடிகள்`
முன்னே போகச்
செய்யும் களவுகள்
கண்டும் மௌனமாக..!

தட்டிக் கேட்டால்
வாரியிறைக்கப்படும்
சேறுகளும்
எண்ணில்லா சகதிகளும்..!

பலரைச் சென்றடையமுடியா
பாழ்பட்ட நிலையில்
பாதி வழியிலேயே
செத்துவிடுகின்றன உணர்வுகள்.!

வெளிச்சம் படாத
நல்ல படைப்பை
அடையாளம் காட்டியும்
மறுக்கிறது `இயந்திரம்`.....!

தனி மனிதனாய்
அநீதிக்கு குரல்கொடுத்தால்
`சிவப்புச்` சாயம் பூசி
உயிருடனேயே
புதைக்கிறார்கள் என்னை...!

கண்டும் காணாமல்
மற்றவர்போல் செல்ல
முடிவதில்லை
எப்போதும் என்னால் ..!

அன்று ஒரு குழுவை ஒடுக்க
திரண்டது பன்னாட்டுப்படை..
இன்று `தனி` மனிதனை அழிக்க
திரள்கிறது பாரதத்தின் படை...!

நோக்கம் நல்லதென்றால்
நாலு பேருக்கு நல்லது நடக்க
தீய ஒருவனை அழிக்கலாம்
நோக்கமே குறுகியதென்றால்..!?
======================================

தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (25-Jan-14, 5:20 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 295

மேலே