மேகமகளிடம் காதல்

மேகமகளிடம் காதல் கொண்ட
காற்று வாலிபன் காதல் ஆசையில் தீண்டிட கருவாக உருவாகும் மழைத்துளி
மகள் அவள்...
_
வாழ ஆசைகொண்டு பூமிநோக்கிட வரும் வழியில்
காலங்கள் மாறிவர பூப்பெய்தும்
அவளை தீண்டிடாமல் மக்கள் குடைகளுக்குள் தஞ்சமுற
மீறியும் தீண்டிவிட்டால் நடக்கிறது....
_
தலை குளியல் அவளின் வருகையில் மகிழ்ந்து
ஆற்றங்கரைகளிலும் ஓடைகளிலும் நடக்கிறது மகிழ்ச்சி திருவிழாக்கள்
பருவக்காதல் அவளையும்
எட்டிவிட நிகழ்கிறது சூரியனோடு காதல் திருமணம்
மணந்த அவனோடு சங்கமித்து
மகிழ்ச்சி வாழ்வில் ஆவியாகி அவனை சென்றடைய
காதல் கணவன் அன்பில் மறந்து போகிறாள்...
_
வாழ்ந்த பூமி காய்ந்து கொண்டிருப்பதை பூமி ஈன்ற மகள்களாம் மரங்கள் தாயைகாக்க மேக மகளுக்கு முறையாக ஈன்றெடுக்கின்றன காற்றென்னும் மகனை மீண்டும் நடக்கிறது...
_
இயற்கையின் காதல் மறுசுழற்சி....

எழுதியவர் : Akramshaaa (25-Jan-14, 7:49 pm)
பார்வை : 54

மேலே