எதை பற்றி நான் கவிஎழுத எந்த கற்பனையில் காகிதத்திற்கு உயிர்கொடுக்க

எண்ணங்கள்
தோன்றவில்லை.,
எமக்குள் சிந்தனை சற்று சிரமப்படுகிறது..

கவிஎழுத வார்த்தை
தேடி தேடி.,
நுன்அறிவு நொடியில் நொந்துபோகிறது...

ஊற்றுகவிகள்
பாலைவனம் ஆகின..
ஊக்குநுனிகள்
உடைந்து போகின..

வார்த்தைகளும்
பஞ்சம் ஆகி.,
வருத்தத்தில்
வாசல்வர தயங்கின..

காகிதமும்
கவியின் கைபடாமல்,
காற்றுவாக்கில்
பறந்து போகின..

கவிகளுக்கு
கருத்து கூறி.,
காவிய மனம்படைத்த
முகநூல் கவிஞர்களே.,
நீங்களே கூறுங்கள்

எதை பற்றி
நான் கவிஎழுத...?
எந்த கற்பனையில்
காகிதத்திற்கு உயிர்கொடுக்க...?

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jan-14, 9:30 pm)
பார்வை : 87

மேலே