காய்ந்த இலையும் கிழிந்த காகிதத்தாளும்

பெயர் அறியா மரம் ஒன்றின்
நிசப்தமான மாலை வேளையில்.....
கற்றை தாளில் கவிதை
ஏதேனும் எழுதி விடலாமென்று
எழுதுகோலை எடுத்தபொழுதுத்
தெறித்த மையிலும்...........
எழவில்லை எழுத்துக்கள்
என்ன எழுதுவது என்று ?
நினைக்க தோன்றுகிறது
எல்லோரும் எழுதி விட்ட
வெள்ளி விழா கண்ட எழுத்தை,
வேண்டாம் வேண்டாம் என்று
எழுத்துகள் முடியும் முன்னே.......
கிழித்து ஏறிக்கிறேன். அந்த தாளை
எரிந்து மிஞ்சி மிஞ்சமாய் போன
எலும்பு கூட்டை போல........
தென்றல் காற்றில்
பட படக்க கீழே வந்து
விழுந்த இலையும்
கிழித்து போட்ட ஒற்றை தாளும்
நடனம் ஆடி கொண்டே இருக்கின்றன
அண்ணனும் தம்பிகளாகவும்,
காதலன் காதலியாகவும்..........
இருக்குமா அதற்கும் நியாபகம்
முற்பிறவியின் நினைவுகள்
இது நம் இனம் தானென்று ???????????????

எழுதியவர் : த.நந்தகோபால் (25-Jan-14, 9:19 pm)
பார்வை : 96

மேலே