பிரிவின் வலி
நாம் கைகோர்த்துச் சென்ற
பயணத்தைக் கண்ட மரத்திற்கும்
அதன் நினைவு அகலவில்லை...
நம் சிரிப்பொலியைக் கேட்ட
நம் வகுப்பின் சுவர்களிலும்
அதன் பதிவு அழியவில்லை...
பரிமாற்றங்களைத் தழுவிய
நம் இலைகளில் இன்றும்
அதன் ருசி மறையவில்லை...
அப்படி இருக்க
உன் மனதில் மட்டும்
நம் நட்பின் சுவடு
அழிந்ததேனடி????????