தாய் தந்தை சிறந்த ஆசான்

தாய்
பிறர் தலை சாய்த்து பார்க்க
நம்மை இதயத்தின் கீழ் சுமக்கிறாள்...
அதில் நமக்குத்
தலை சாய்க்கும் அடக்கத்தைக்
கற்றுத் தருகிறாள்...!
தந்தை
பிறர் தலை நிமிர்ந்துப் பார்க்க
நம்மை இதயத்தின் மேல் சுமக்கிறார்...
அதில் நமக்குத்
தலை நிமிர்ந்த வாழ்வைக்
கற்றுத் தருகிறார்...!