பிள்ளை மனம்

அழகிய சூழல்
பிள்ளைகளின் சந்தோசம்
குதூகலமாக ஓடி விளையாடும்
பள்ளிச் சிறார்கள்!
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஆசான்கள்!
சந்தோசத்திற்கு முற்றுப்புள்ளி!
பாடசாலை ஆரம்ப மணி ஒலி.
வகுப்பறைச் சிறையில் கைதான மாணவர்கள்!
சிறைக் காவலராய் ஆசிரியர்கள்
வகுப்பறையில்!
சுதந்திரம் பரிக்கப்பட்டவர்களாய்
மாணவர்கள்!
மனமின்றி ஆசிரியரின் கற்பித்தல்
பதியவில்லை மனதில்!
விடுகைக்காய் மாணவர்
எதிர்பார்ப்பு!
விடுதலைக்காய் காத்திருக்கும்
சிறைக்கைதி போன்று!!
குதூகலம் குழப்பப்பட்டதன்
எதிரொலி!!
பதியவில்லை மனதில் கல்வி
போதனைகள்.
பசியான வேளை ஏறவில்லை கல்வி
மனதில்!
ஆசிரியர் கேள்விக்கு விடை
ஓணானின் தலையாட்டல்!
புரிந்தது ஆசிரியர்க்கு மாணவர்க்கு புரியவில்லையென்று!
பின்னூட்டல் கல்வி வீணானது
ஏற்கவில்லை பிள்ளை மனம்!
பாடசாலை விடுகை மணி மாணவர்
காதுகளில் மதுர கீதமாய் ஒலித்தது.
சிட்டாய்ப்பறந்தனர் கூண்டிலிருந்து
விடுபட்ட சிட்டுக் குருவியாய்!
சந்தோச உரையாடல் மீண்டும்!
மாலை நேர விளையாட்டிற்காய்!
நேர அட்டவணை பரிமாறல்
குதூகலமாய்!!