லிமரைக்கூ-கேஎஸ்-கலை
மோதிக் கொண்டது சாதி
எல்லாம் முடிந்து போன பிறகு
வீதிமுழுதும் ஒரேகுருதி மீதி !
----------
ஆப்பிழுத்து மாட்டியது குரங்குவால்
ஆசையில் வந்து அவசரத்தில் முட்டிமோதி
அரசியலில் மாட்டுவாரோ கெஜ்ரிவால் ?
----------
மாசத்திற்கு ஒருமுறையாம் கடாவெட்டு
வாயார மனசார வயிறார சாப்பிடும்போதும்
நெத்தியிலே வச்சிருப்பார் விபூதிப்பொட்டு !
---------- ==== ----------
என்னென்னமோ பேசுமவளின் விழிகள்
மடிமீது வந்தமர்ந்து மழலைமொழி பேசும்போது
எண்ணமெல்லாம் பேசும்மௌன மொழிகள் !
----------
கண்ணெதிரே வந்தாள் ஒருத்தி
கண்டதைப் பேசி நெஞ்சத்தை தொலைத்து
கண்டறிந்தேன் அவள் ஒருத்"தீ" !