பாட்டும் பரதமும்

பாரு பாரு படம் பாரு
ஆடு ஆடு ஆட்டம் ஆடு
பாடு பாடு பாட்டு பாடு
என்று பாட்டு ஒலிக்க
தாளமும் அடவும் ஒன்றோடு
ஒன்று கலந்து உறவாட
பாவமும் முத்தாய்ப்பும்
அருமையாகக் கூடி வர
கண் அசைவும் கழுத்து
அட்டமியும் பொருந்தி வர
டப்பாங் குத்து ஆட்டம் போல்
தொனிக்க முதலில்
பாட்டு அவ்வாறிருக்க
நேரம் கடக்க அது
நல்ல பயிற்சியின்
விசாலமான நாட்டியமே
அற்புதமான நடனமே
என்று தெளிந்து
நின்று கண்டு களிக்க
நிகழ்ச்சி ஒன்று அழகாக
அரங்கேறியது கோர்வையாக.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Jan-14, 1:22 pm)
பார்வை : 4801

மேலே