காதல் என்பது

ஓர் கூடையின் மலர்களை
தலையில் கொட்டி மகிழ்விப்பதும் காதலே!
ஓர் ரோஜா இதழில்
தன் காதலரின் பெயரை வடிப்பதும் காதலே!
கடற்கரையில் கைகோர்த்து
அலைகளில் கால் நனைவதும் காதலே!
கடற்கரை சாலையில்
வாகனத்தில் வெகுதூரம் பயணிப்பதும் காதலே!
அனுதினமும் பார்த்துக்கொண்டே
அன்பால் அனைப்பதும் காதலே!
அழகு புகைபடத்தை தலையனை
அடியில் வைத்து கனவில் மிதப்பதும் காதலே!
ஆசைகளை வெளிபடுத்தும்
எண்ணமும் காதலே!
மனதிலே வைத்து
காத்திருப்பதும் காதலே!
இச்சைகளை செயலாக்கும்
உச்சக்கட்டமும் காதலே!
உள்ளத்திலே மறைத்து
வெட்கப்படுவதும் காதலே!
காதலியின் மடியில்
தலைவைத்து படுப்பதும் காதலே!
அவள் தலைக்கோதி
கொஞ்சும் தாய்மையும் காதலே!
பலமுறை காதலை
உணர்த்துவதும் காதலே!
பயத்தில் சொல்லாமல்
மறைப்பதும் காதலே!
கேட்பவையெல்லாம் கொடுத்து
திகட்ட வைப்பதும் காதலே!
எதிர்பார்ப்புகளை புரிந்து நடந்து
திடுக்கிடச் செய்வதும் காதலே!
ஆனால்,
இரு உயிர்களின் விழிகள்
சந்திக்கும் போது
இதய துடிப்பு அதிகரித்து
உச்சி முதல் பாதம் வரை ஓர்
உண்ணத உணர்வு பறவி
மொழிகள் இன்றி மெளனமாய்
கண்களில் வழியும் அந்த
கண்ணீர் துளிகளே
உண்மையில் காதலோ!!!