நான் போகிறேன்

நாங்கள்
பிரிவதும் இல்லை
சேர்வதும் இல்லை
எங்கள் காதல்
இறுதி வரை
உயிரோடு தான் இருக்கும்..
அன்பே!
நான் வெகுதூரம் போகிறேன்
என்-காதல்
தந்த காயம்
இனியும் வேண்டாம்
நான் போகிறேன்..!!
என் பாதை எங்கும்
கால் தடங்களை தேடாதே..
கண்ணீர் தடங்களை மட்டுமே
விட்டு செல்கிறேன்..
அன்பே..!
நான் போகிறேன்..