எதிர்காலம்
நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.அவர் மகனை சத்தமாக பேச வைத்து ரசித்துக்கொண்டு இருந்தார்.
"என்ன சார் பண்றிங்க"ன்னு கேட்டேன்.
"பேச்சு பயிற்சி கொடுக்குறேன் சார்,பின்னாடி பேச்சாளரா வருவான்" என்றார்.
"பேசாம இருக்க பயிற்சி கொடுங்க சார்,பின்னாடி பிரதமராவே வருவான்" என்று அறிவுரை சொல்லிவிட்டு வந்தேன்

