சுயபுத்தி
கடந்துபோகிற மேகங்கள்,
கட்டுப்படும் கைகளுக்குள்,
என கட்டுப்பெட்டியாய் யோசித்தது,
யாரென்று யோசனை செய் !
ஆசுவாசப்படுத்தி அமைதிப்படுத்தும்,
உன்னையே உன் மனச்சாட்சி !
எதிர்பார்ப்பை விதைத்து வைராக்கியமாய்,
பலன்தரமட்டிலும் பிறரை நோக்கினால்,
எது நடக்கும் ஏமாற்ற அறுடையைத்தவிர?
உன்னை செதுக்கு நீயே முதலில் !
அவரை கணித்து தடம்செலுத்த அவரவருண்டு !!