கண்ணதாசனின் அசரிரீ
நான்
நிரந்தரமானவன்
அழிவதில்லை..
ஊற்றாயிருந்திருகிறேன்
கவிதைகளை சுரப்பதில்..
ஆற்றுபடுத்தினேன்
உங்களையெல்லாம் நல்லவை நோக்கி..
எக்கருவும்
என்
கவிதைத் தேரில்
பயணிக்கும்..
அர்த்தமுள்ள
இந்து மதத்தில்
இருந்தும்
இயேசு காவியம்
படித்தேன்
எம்மதமும் சம்மதம்...
நான் போதையில்
தடுமாறியிருக்கிறேன்
ஆனால்
பாதையில்
தடம் மாறியதில்லை..
மரணம் நிகழ்ந்தது
என் உடலுக்கு மட்டும்
நான் எண்ணியாங்குபடி..
யாரும் நினையா
அர்த்த ராத்திரியில்..
அந்தரத்தில்
என் விமான பயணத்தில்..
உயிரோடு இருக்கிறது
என் கவிதைகள்
உங்களிடம் பத்திரமாய் ..
நான் நிரந்தரமானவன்
அழிவதில்லை ...